கணிய அளவீடு(Quantity Surveying) என்றால் திட்டமிடல்(planning),மதிப்பிடல்(estimating),கட்டுப்படுத்தல்(controlling) போன்ற முக்கியமான செயற்பாடுகளைக்கொண்டது. இது மனித வாழ்வில் அன்றாட செயற்பாடு. ஆனால் கணிய அளவீடு என்பது கட்டட நிர்மாணத்துறையில் மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது.எவ்வாறு? எப்பொழுது? என்பது மிகமுக்கியம்.ஏனெனில் கட்டட நிர்மாணத்துறை அதிகளவு நிதி முதலீட்டுடன் தொடர்புடையது.இந்த இடத்தில் நிதி முகாமைத்துவத்தின் மூலம் சிறந்த வெளியீட்டினைப்பெறச்செய்தலே கணியஅளவையியலாளனது செயற்பாடு எனக்கூறலாம்.
உதாரணமாக ஒரு கட்டட நிர்மாணச்செயற்பாட்டின் போது நிதித்திட்டமிடல் கட்டுப்படுத்தல் மதிப்பீடு முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில் சரியான திட்டமிடல் மதிப்பிடல் கட்டுப்படுத்தல் இல்லையெனில் அக்கட்டடநிர்மாணச்செயற்பாடு தடைப்படுவது அதிகம். ஏனெனில் நிதி ஒதுக்கீடு போதியதாக இல்லாதிருத்தல் நிதிப்பற்றாக்கறை ஏற்படுதல் வீண்விரயம் போன்ற காரணங்கள் முக்கியமானவை. அதிகமான தொகையை முதலிடும் போது இவ்வாறான செயற்பாடுகள் முக்கிய இடத்தை வகிப்பது மட்டுமன்றி முதலீட்டாளர்களைப்பாதுகாக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் இல்லையெனில் வெளியீடுகளின் தரம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறான முக்கிய செயற்பாடுகளைக்கொண்டதே கணிய அளவீடு. இது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. தொடர்ந்து மேலும் விரிவாகவும் ஒரு ஆய்வுக்களமாகவும் வளர உங்கள் ஒத்துழைப்பையும் பேராதரவையும் நாடி நிற்கும் கணியம்.
No comments:
Post a Comment