Pages

Jun 6, 2009

காதலின் சின்னம்




காதலின் சின்னம் என்றவுடன் என்னோட காதல் கதையோ இல்லை உங்களோட கதையோ என்று நினைக்காதீங்க. இற்றைக்கு 356 ஆண்டுகளில் வாழ்ந்த முகலாயப்பேரரசர் ஷாஜகான் மன்னனது காதல் சின்னத்தைப்பற்றித்தான். அது உலக அதிசயங்களில் ஒன்று.
முகலாயப்பேரரசர் ஷாஜகான் தனது மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் அவள் இறந்தபின்அவளது நினைவாக உருவானதே தாஜ்மஹால்.
நூற்றுக்கு மேற்பட்ட வடிவமைப்புக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவ்வடிவமைப்பு 1631 ஆம் ஆண்டு கட்டட வேலை (Persian architect) Ustad Isa மற்றும் Isa Muhammad Effendi என்ற கட்டட வடிவமைப்பாளர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருபதினாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகளினதும் ஆயிரத்திற்கும் அதிகமான யானைகளினதும் 22 வருட கடின உழைப்பினால் இன்றைய பெறுமதி 32 மில்லியன் இந்திய ரூபா அல்லது 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து கட்டப்பட்டது.
இதற்கான கட்டடப் பொருட்கள் பல இடங்களிலிருந்து பெறப்பட்டது.

இது ஐந்து பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அவை முறையே
the Darwaza or main gateway, the Bageecha or garden, the Masjid or mosque, the Naqqar Khana or rest house, and the Rauza or the Taj Mahal mausoleum

இது உள்ளடக்கியுள்ள நிலப்பரப்பு 580m X 300m (1902 ft X 984 ft) ஆகும். 186ft X 186ft பரப்பு அடித்தளத்தின் மீது கட்டடம் அமைந்துள்ளது.நான்கு மூலையிலும் 162.5 அடி உயரத்தைக்கொண்ட minarets அமைந்துள்ளது. அதன் நடுவே 60 அடி விட்டத்தையும் 80 அடி உயரத்தையும் கொண்ட dome அமைந்துள்ளது. 3 ஏக்கர் ஆற்று நிலப்பரப்பு 50 மீற்றர் கடல்மட்டத்திலிருந்து உயரத்திற்கு உயர்த்தி அத்திவாரமிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...