Pages

Nov 3, 2009

இவனல்லோ எழுத்தாளன்!!!



என்ன நடந்ததென்று பார்க்கறீங்களா?
இருக்கிறம்ஒன்றுகூடலில் இருக்கிறதைச்சொன்னேன்.இந்த அனுபவம் நன்றாகவே இருந்தது.
நானும் ஒரு பதிவர் என்ற நம்பிக்கை என்னை இதன் பின்னர் பெரிதும் உற்சாகப்படுத்துகிறது.
இங்கு என் கண்ணில்பட்ட என்னைக்கவர்ந்த ஒன்று, ஒருவர் ஒலிவாங்கியில் உரையாடி முடித்தபின் தனது கையடக்கத்தொலைபேசியை switch on செய்தார். இன்று எம்மத்தியில் பலர் பெரிய நிகழ்ச்சிகளில் கூட switch off செய்யாமல் ஒலிவாங்கியில் உரையாடுவதுண்டு. இதனால் உரையாடலின் மத்தியில் அழைப்பு வந்தால் silence இல் இருந்தாலும்கர்...............” எனும் சத்தம் வரும் இதனால் அங்கு எல்லோருடைய எண்ணமும் திசை திருப்பப்படுகிறது.அங்கு இவ்வாறு செய்தவர் ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர்.இவரது செயற்பாடு ஒரு முன்னுதாரணமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே!! இது எழுத்தாளனுக்கு அழகு!!

அதுமட்டுமா,பல்வேறுபட்ட பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதற்குஇருக்கிறம்அச்சுவலை குழுவினருக்கு கணியத்தின் நன்றியையும் கூறிக்கொள்கின்றேன்.

புகைப்படங்களைத்தந்த சுபானுவிற்கு நன்றி!

Jul 11, 2009

Preliminaries Cost என்றால் என்ன?



நிர்மாண வேலை தொடங்கவேண்டுமாயின் முதலில் அதற்கு தயார் படுத்தவேண்டும். தயார் படுத்துவதற்கான செலவே Preliminaries cost ஆகும்.நிர்மாண வேலை பூரணமடைந்தபின் இந்தச்செலவு வெளிப்படையாக எமக்குத்தெரியாது. உதாரணமாக நாம் நிர்மாணவேலை ஆரம்பிக்கும் இடத்தில் பழைய கட்டடங்கள் மரங்கள் போன்றவை இருந்திருப்பின் அவற்றை அகற்றியதற்கான செலவு மறைக்கப்பட்டுவிடும். வெளிப்படையாகத்தெரியாது. அதாவது புதிய கட்டடத்தையே நாம் பார்க்க முடியும்.
நாம் சீமெந்து பூச்சு போன்றவற்றிற்கு செலவு செய்தது வெளிப்படையாகத்தெரியும்.
preliminaries cost என்பது நிர்மாணவேலையின்போது தவிர்க்கமுடியாத செலவு. அதனை சரியாக அடையாளப்படுத்தவேண்டும்.

இது இரண்டு வகையாகப்பிரிக்கப்படுகிறது.
1. நிலையான செலவு (fixed cost)
2. நேரத்துடன் தொடர்புடைய செலவு (time related cost).



தொடரும்......

Jun 6, 2009

காதலின் சின்னம்




காதலின் சின்னம் என்றவுடன் என்னோட காதல் கதையோ இல்லை உங்களோட கதையோ என்று நினைக்காதீங்க. இற்றைக்கு 356 ஆண்டுகளில் வாழ்ந்த முகலாயப்பேரரசர் ஷாஜகான் மன்னனது காதல் சின்னத்தைப்பற்றித்தான். அது உலக அதிசயங்களில் ஒன்று.
முகலாயப்பேரரசர் ஷாஜகான் தனது மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் அவள் இறந்தபின்அவளது நினைவாக உருவானதே தாஜ்மஹால்.
நூற்றுக்கு மேற்பட்ட வடிவமைப்புக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவ்வடிவமைப்பு 1631 ஆம் ஆண்டு கட்டட வேலை (Persian architect) Ustad Isa மற்றும் Isa Muhammad Effendi என்ற கட்டட வடிவமைப்பாளர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருபதினாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளிகளினதும் ஆயிரத்திற்கும் அதிகமான யானைகளினதும் 22 வருட கடின உழைப்பினால் இன்றைய பெறுமதி 32 மில்லியன் இந்திய ரூபா அல்லது 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து கட்டப்பட்டது.
இதற்கான கட்டடப் பொருட்கள் பல இடங்களிலிருந்து பெறப்பட்டது.

இது ஐந்து பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அவை முறையே
the Darwaza or main gateway, the Bageecha or garden, the Masjid or mosque, the Naqqar Khana or rest house, and the Rauza or the Taj Mahal mausoleum

இது உள்ளடக்கியுள்ள நிலப்பரப்பு 580m X 300m (1902 ft X 984 ft) ஆகும். 186ft X 186ft பரப்பு அடித்தளத்தின் மீது கட்டடம் அமைந்துள்ளது.நான்கு மூலையிலும் 162.5 அடி உயரத்தைக்கொண்ட minarets அமைந்துள்ளது. அதன் நடுவே 60 அடி விட்டத்தையும் 80 அடி உயரத்தையும் கொண்ட dome அமைந்துள்ளது. 3 ஏக்கர் ஆற்று நிலப்பரப்பு 50 மீற்றர் கடல்மட்டத்திலிருந்து உயரத்திற்கு உயர்த்தி அத்திவாரமிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.

May 11, 2009

கட்டடக்கலையின் சாகசம்....






கட்டடக்கலையின் பிரமிக்கத்தக்க சாகசங்களில் ஒன்று ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower). முற்றுமுழுதாக உலோகத்தினால் (Steel work) உருவாக்கப்பட்டது. முற்றுமுழுதாக ஆணிகளினால் (Nut & bolts) பிணைக்கப்பட்டுள்ளது. உருக்கி(welding work) ஒட்டப்படவில்லை.



வரலாறு:
பாரிஸ் நகரில் 1889 ஆம் ஆண்டு 300.51 மீற்றர்(300.51m/985 feet 11 inch) உயரம் கொண்ட கோபுரம் வெற்றிகரமாக்கட்டப்பட்டது. கோரப்பட்ட வடிவமைப்புக்களில் போட்டிமிக்க எழுநூறு வடிவமைப்புக்களில் French structural engineer Alexandre Gustave Eiffel தலைமையிலான Engineers Maurice Koechlin and Emile Nouguier, and Architect Stephen Sauvestre குழுவினால் வழங்கப்பட்ட வடிவமைப்பு சிறந்ததாக தெரிவுசெய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட உலோகம் puddle iron என்ற உலோகமாகும்.
முந்நூறு உலோகக்கலைஞர்களைக்கொண்டு 1887 - 1889 காலப்பகுதியில் கட்டப்பட்டது.பதினைந்தாயிரம் உலோகத்துண்டுகளின் (15000 iron pieces) பிணைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 மில்லியன் (2.5 million rivets) நிர்மாணத்திற்காக 40 தொன் பூச்சு(40 ton paints) பயன்படுத்தப்பட்டது. 1671 படிகளைக்கொண்டுள்ளது. அதன் உயரம் 1889 இல் 300.51 மீற்றர். தற்போது தொலைக்காட்சி ஒலிபரப்புச்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் தற்போதைய உயரம் 320.755 மீற்றர் ஆகும். இதன் உயரம் சூழல் வெப்பநிலைக்கேற்ப 15 சென்ரிமீற்றரினால் வேறுபடுகிறது. 10281.96 சதுர மீற்றராகும். அத்திவாரத்தின் நிறை 277,602 kg (306 tons). பயன்படுத்தப்பட்ட உலோகத்தின் நிறை 7.34 million kg (8092.2 tons). Weight of elevator systems: 946,000 kg (1042.8 tons). மொத்த உலோகங்களின் நிறை 8.56 million kg (9441 tons). அத்திவாரத்திலுள்ள அழுத்தம் 4.1 தொடக்கம் 4.5 கிலோகிராம் ஒரு சதுர சென்ரிமீற்றருக்கு ஆகும்.(4.1 to 4.5 kg per square centimeter).
கட்டப்பட்ட காலம் 26 ஆம் திகதி தை மாதம் 1887 முதல் 31 ஆம் திகதி பங்குனி மாதம் 1889 காலப்பகுதியாகும். (January 26, 1887 to March 31, 1889).
கட்டடத்திற்கான மொத்தச்செலவு 7.8 million francs ($1.5 million).
1889 காலப்பகுதியில் வருகை தந்தோரின் எண்ணிக்கை 1,968,287.
2007 காலப்பகுதியில் வருகை தந்தோரின் எண்ணிக்கை 6,822,000.

கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.












ஈஃபிள் கோபுரத்தைச்சுற்றுவதற்கு கீழேயுள்ள தொடுப்பைச்சொடுக்கவும்.

தமிழ்மணத்தின் அங்கீகாரம்

தொடக்கமே நல்லதாக அமைந்துள்ளது. எவ்வாறு என்று கேட்கிறீர்களா? ஒழுங்காகப்பதிவுகள் இடத்தொடங்கியவுடன் தமிழ்மணத்தில் இணைவதற்காக கொடுத்த வேண்டுகோள் அதே தினத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எமக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! வெற்றி!. மேலும் தொடர்ந்து வெற்றியடைய உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றது கணியம்!

எம்மை ஒரு அங்கத்தவராக ஏற்றுக்கொண்ட தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும்!

May 8, 2009

கணிய அளவீடு என்றால்.....

கணிய அளவீடு(Quantity Surveying) என்றால் திட்டமிடல்(planning),மதிப்பிடல்(estimating),கட்டுப்படுத்தல்(controlling) போன்ற முக்கியமான செயற்பாடுகளைக்கொண்டது. இது மனித வாழ்வில் அன்றாட செயற்பாடு. ஆனால் கணிய அளவீடு என்பது கட்டட நிர்மாணத்துறையில் மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது.எவ்வாறு? எப்பொழுது? என்பது மிகமுக்கியம்.ஏனெனில் கட்டட நிர்மாணத்துறை அதிகளவு நிதி முதலீட்டுடன் தொடர்புடையது.இந்த இடத்தில் நிதி முகாமைத்துவத்தின் மூலம் சிறந்த வெளியீட்டினைப்பெறச்செய்தலே கணியஅளவையியலாளனது செயற்பாடு எனக்கூறலாம்.

உதாரணமாக ஒரு கட்டட நிர்மாணச்செயற்பாட்டின் போது நிதித்திட்டமிடல் கட்டுப்படுத்தல் மதிப்பீடு முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில் சரியான திட்டமிடல் மதிப்பிடல் கட்டுப்படுத்தல் இல்லையெனில் அக்கட்டடநிர்மாணச்செயற்பாடு தடைப்படுவது அதிகம். ஏனெனில் நிதி ஒதுக்கீடு போதியதாக இல்லாதிருத்தல் நிதிப்பற்றாக்கறை ஏற்படுதல் வீண்விரயம் போன்ற காரணங்கள் முக்கியமானவை. அதிகமான தொகையை முதலிடும் போது இவ்வாறான செயற்பாடுகள் முக்கிய இடத்தை வகிப்பது மட்டுமன்றி முதலீட்டாளர்களைப்பாதுகாக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் இல்லையெனில் வெளியீடுகளின் தரம் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறான முக்கிய செயற்பாடுகளைக்கொண்டதே கணிய அளவீடு. இது ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. தொடர்ந்து மேலும் விரிவாகவும் ஒரு ஆய்வுக்களமாகவும் வளர உங்கள் ஒத்துழைப்பையும் பேராதரவையும் நாடி நிற்கும் கணியம்.

கணியத்தின் தோற்றம்...

கணியம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள்.எனக்குத்தெரிந்த கணியஅளவீடு தொடர்பான கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நீண்டநாள் முயற்சியின் பலனாக இன்று முதல் உங்கள் மத்தியில் வலம் வருகிறது. நீங்கள் இதனை வாசிப்பதோடு நின்றுவிடாது நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
யாழ்ப்பாணத்து பௌதீக விஞ்ஞான மாணவர்களின் இலட்சியம் என்றால் பொறியியல் தவறினால் பௌதீக விஞ்ஞானம் மட்டுமே.இது அவர்களின் தவறல்ல.சூழலே காரணம்.ஏனெனில் எவரும் பெறுபேறு வந்ததும் கேட்பது என்ன என்பதல்ல மாறாக பொறியியலா? என்ற கேள்விதான் எழுகிறது.
இதையும் மீறி கணியஅளவீட்டிற்கு வந்திருந்தால் அது உடனடித்தீர்மானமே ஒழிய நீண்டகாலக்கனவு அல்ல.விதிவலக்காக இருக்கலாம்.ஆனால பெரும்பான்மை....???

இதற்கு என்ன காரணம்..?? போதிய அறிமுகமின்மை..?? போலி கௌரவம்..??

ஆனால் இன்று யாரைக்கேட்டாலும் கணியஅளவீடு....??எதற்காக...?? அதிகமானோர் நினைப்பது வருமானத்தை மட்டுமே...??கணியஅளவீட்டின் மீது கொண்ட ஆர்வத்தினாலோ அல்ல...??ஒரு சிலர் திட்டுவது கேட்கிறது. ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது பெரும்பாலானோர்.எல்லோருமல்ல. கல்வி என்பது வருமானத்தினை மட்டும் மையமானது அல்ல. அது ஒரு பகுதியே.
Related Posts Plugin for WordPress, Blogger...